"பெத்லகேம் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை'
By DIN | Published On : 04th April 2019 06:17 AM | Last Updated : 04th April 2019 06:17 AM | அ+அ அ- |

ஆம்பூர் பெத்லகேம் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆம்பூர் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ. ஜோதிராமலிங்கராஜா உறுதியளித்தார்.
ஆம்பூர் நகர அதிமுக செயலர் எம். மதியழகன் தலைமையில் ஸ்ரீராமபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஜெ.ஜோதிராமலிங்கராஜா கட்சியினருடன் சென்று புதன்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது, வாக்காளர்களிடம் பேசிய அவர், ஆம்பூர் நகரப் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான பெத்லகேம் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதிமுக நிர்வாகிகள் அன்பரசன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.