வாக்குச் சாவடியைக் கண்காணிக்க "போல் போலீஸ்' புதிய செயலி

மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க வேலூர் மாவட்டக் காவல்துறை

மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க வேலூர் மாவட்டக் காவல்துறை சார்பில் "போல் போலீஸ்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவும், மாவட்டக் காவல்துறையும் இணைந்து மக்களவை, பேரவை இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல்துறைக்கு உதவும் விதமாக இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலமாக மாவட்டத்தில் மொத்தமுள்ள வாக்குச் சாவடிகள், அவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் விவரங்கள், அந்தச் சாவடிகளில் நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்களின் விவரங்கள், அவர்களின் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை பணியில் உள்ள அலுவலர்கள் தெரிந்து கொள்ள முடியும். 
தவிர, நெருக்கடியான சமயத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் நிலைமையை அறிய வாக்குச்சாவடிக்கு அருகிலுள்ள வீடு, அலுவலகங்களின் தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ள இடங்களை ஜிபிஎஸ் கருவி மூலம் அறியவும், வாக்குச்சாவடிகளில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு ஏதுவாக விவரங்களை அறியும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய செயலியை வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் திங்கள்கிழமை அறிமுகம் செய்தார். அப்போது, வேலூர் சரக டிஐஜி வி.வனிதா உள்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com