மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள்

குடியாத்தம் நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள்

குடியாத்தம் நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக 25 சக்கர நாற்காலிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
திங்கள்கிழமை நடைபெறும் வேலூர் மக்களவைத் தேர்தலுக்காக குடியாத்தம் நகரில் உள்ள 25 பள்ளிகளில் 81 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்
பட்டுள்ளன.
இந்த மையங்களில் வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகள், நடக்க முடியாத முதியவர்களைஅழைத்துச் செல்ல 25 தன்னார்வலர்களுடன், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பெறப்பட்ட 25 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் தன்னார்வலர்களுக்கு பனியன், தொப்பி, அடையாள அட்டைகளை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) த. சௌந்தரராஜன் வழங்கி வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைத்தார்.
நகராட்சிப் பொறியாளர் ஜி.உமா மகேஸ்வரி, நகரமைப்பு ஆய்வாளர் ஏ. வெங்கடேசன், சுகாதார அலுவலர் தமிழ்ச்செல்வன், நகராட்சி மேலாளர் சூரியபிரகாஷ், சுகாதார ஆய்வாளர் பாண்டி செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆம்பூரில்...
ஆம்பூர் நகரில் வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலிகளை ஆம்பூர் நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தார். 
ஆம்பூரில்  உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு 26 சக்கர நாற்காலிகள்,  முதியவர்களுக்கும், மாற்றுத்  திறனாளிகளுக்கு உதவுவதற்காகவும் தன்னார்வலர்களும்  அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாக்குப் பதிவு விழிப்புணர்வு
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற உள்ளதையொட்டி, 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
ஊராட்சி செயலர் குமரேசன் தலைமையில் பணியாளர்கள் துண்டுப் பிரசுரங்களை அளித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் வாணியம்பாடி, ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com