சிண்டிகேட் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது: வட்டார மேலாளர் தகவல்

சிண்டிகேட் வங்கியில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக வங்கியின் வேலூர் வட்டார மேலாளர் ஜெ.சுரேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சிண்டிகேட் வங்கியில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக வங்கியின் வேலூர் வட்டார மேலாளர் ஜெ.சுரேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிண்டிகேட் வங்கியில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வீடு, வாகனம், நுகர்வோர் கடன்கள் சிண்டிகேட் வங்கியில் வழங்கப்படுகின்றன. இந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு சிறப்பு குறியீட்டு எண் வழங்கப்படும். அது விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், வங்கிக் கடனுக்கான பல்வேறு கட்ட பரிசீலனைகளும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்.   விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களின் நிலையை டிஜிட்டல் மூலம் அறியும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com