கோழிக்கழிவுகளால் பொது சுகாதாரம் பாதிப்பு

பேர்ணாம்பட்டு அருகே இறந்த கோழிகளின் கழிவுகளால் ஈக்கள் பெருகி, பொதுசுகாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

பேர்ணாம்பட்டு அருகே இறந்த கோழிகளின் கழிவுகளால் ஈக்கள் பெருகி, பொதுசுகாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
பேர்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம், கொத்தமாரிகுப்பம் ஆகிய கிராமங்கள் அருகருகே அமைந்துள்ளன. இந்த இரு கிராமங்களுக்கிடையே தாய்லாந்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் 2 கோழிப்பண்ணைகளை அமைத்துள்ளது. 
இந்த கோழிப்பண்ணைகளில் தலா 5 லட்சம் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பண்ணையில் இறக்கும் கோழிகளை கலனில் போட்டு எரியூட்டி சாம்பலாக்குவது வழக்கம். ஆனால், இந்த நிறுவனம் விதிமுறைகளுக்கு மாறாக இறந்த கோழிகளை பண்ணைக்கு அருகில் வெட்ட வெளியில் கொட்டுகின்றனர். 
இறந்த கோழிகளை காகம், பருந்து போன்ற பறவைகள் கொத்திச் செல்கின்றன. அப்போது, கோழிக்கழிவுகள் சிதறுவதால், அதிகளவில் ஈக்கள் உருவாகின்றன. இந்த ஈக்களால் பொதுசுகாதாரம் பாதிக்கப்படுவதாக அந்த கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஈக்களின் பெருக்கத்தால் குழந்தைகள், முதியவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.  
இதுகுறித்து மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com