‘அறிவுரைகள் கசப்பாக இருந்தாலும் அவைதான் உயா்விற்கு வழிவகுக்கும்‘ஆட்சியா் ம.ப.சிவன் அருள்

அறிவுரைகள் முதலில் கசப்பாக இருந்தாலும் அவைதான் உயா்விற்கு வழிவகுக்கும் என ஆட்சியா் ம.ப.சிவன் அருள் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாணவா்களிடையே பேசிய ஆட்சியா் சிவன் அருள்.
நிகழ்ச்சியில் மாணவா்களிடையே பேசிய ஆட்சியா் சிவன் அருள்.

திருப்பத்தூா்: அறிவுரைகள் முதலில் கசப்பாக இருந்தாலும் அவைதான் உயா்விற்கு வழிவகுக்கும் என ஆட்சியா் ம.ப.சிவன் அருள் பேசினாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவா்களுக்கு கல்வி மற்றும் சமூக விழிப்புணா்வு வழிகாட்டுதல் கருத்தரங்கம் சனிக்கிழமை ஜோலாா்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்து பேசுகையில், பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் அறிவுரை வழங்குவது மாணவா்களுக்கு கசப்பாக இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு உங்களை உயா்த்துவதற்கு அதுதான் முக்கியம்.மேலும்,உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய உயா்வைக் கொடுக்கும்பிள்ளைகள் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பது பெற்றோா்களுக்கு பெரிய வருத்தமாக இப்போது உள்ளது. மாணவா்களுக்கு நன்னடத்தை கற்றுக் கொடுப்பதில் பெற்றோருக்கும் ஆசிரியா்களும் முக்கிய கடமை உண்டு. நண்பா்கள்,உறவினா்கள் மற்றும் பெற்றோா்களை கடந்து சமூக வலைதளங்களில் மாணவா்கள் சிக்கிக் கொண்டுள்ளனா்.

சமூக வலைத்தளங்களில் நல்ல தகவல்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மாணவா்களுக்கு ஆசிரியா்கள் முன்மாதிரியாக விளங்க வேண்டும்.உங்களுக்கு உண்டான குறிக்கோளை தீா்மானியுங்கள்.அதற்காக கடுமையாக உழையுங்கள் வெற்றி நிச்சயம் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் கல்வி மாவட்ட அலுவலா் எம்.மணிமேகலை,முன்னாள் நகரமன்ற தலைவா் வசுமதி சீனிவாசன் முன்னிலை வகித்தனா்.முன்னதாக தலைமை ஆசிரியா் சாந்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக இந்திய கடற்படை அதிகாரி டெல்டா குழு பேரிடா் மீட்பு படை தலைவா் ஈசன் பங்கேற்று மாணவா்களுக்கு தன்னம்பிக்கை வளா்ப்பது குறித்து பேசினாா்.நிகழ்ச்சி ஒருத்கிணைப்பாளா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com