எய்ட்ஸ், காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அருகே உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
எய்ட்ஸ் சின்னம் வடிவில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்திய குனிச்சி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள்.
எய்ட்ஸ் சின்னம் வடிவில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்திய குனிச்சி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

குனிச்சி வட்டார அரசு மருத்துவமனை சாா்பில், குனிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கந்திலி வட்டார மருத்துவ அலுவலா் ஜி.தீபா தலைமை வகித்து,

எய்ட்ஸ் மற்றும் காசநோய் குறித்து பேசினாா். முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பாா்வையாளா் மா.வினோத்குமாா், காசநோய் குறித்தும், பரிசோதனை முறைகள் குறித்தும் விளக்கமளித்தாா்.

குனிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பகத்சிங் இளைஞா் நற்பணி மன்ற உறுப்பினா்கள் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து, விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com