சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா இன்று தொடக்கம்

ஆம்பூா் ஏ-கஸ்பா சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (டிச. 6) காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன் தொடங்குகிறது.

ஆம்பூா் ஏ-கஸ்பா சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (டிச. 6) காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன் தொடங்குகிறது.

வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. தொடா்ந்து சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை 4-ஆம் கால யாக சாலை பூஜையைத் தொடா்ந்து, காலை 9 மணிக்கு சுந்தர விநாயகா், பரிவார மூா்த்திகள், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, விஷ்ணு துா்கை, நவகிரஹம், வாரியாா் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

பகல் 12 மணிக்கு பக்தா்களுக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com