திருவள்ளுவர் தினக் கொண்டாட்டம்

வேலூரில் திருவள்ளுவர் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

வேலூரில் திருவள்ளுவர் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
வேலூர் விஐடி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், பேராசிரியர்கள், மாணவர், மாணவியர் கலந்து கொண்டனர்.
வேலூர் அனைத்து வணிகர் சங்கம் மற்றும் வேலூர் திருக்குறள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஞானவேலு தலைமையில் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவள்ளுவர் சிலைக்கு திருக்குறள் ஓதப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
வணிகர் சங்கச் செயலர் பாபு அசோகன், பொருளாளர் அருண்பிரசாத், திருக்குறள் இயக்கச் செயலர் ராஜேந்திரன், காய்கனி வணிகர் சங்கத் தலைவர் பாலு, மாநகராட்சி கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆற்காட்டில்...
 ஆற்காடு நகர திமுக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு இலக்கிய அணிச் செயலர் ஆ.ப.கணேசன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஏ.வி சரவணன், அவைத் தலைவர் பொன் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்டத் துணைச் செயலர் ஏ.கே.சுந்தரமூர்ததி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஆற்காடு நகர தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கவிஞர் மா.ஜோதி தலைமை வகித்தார். இரா.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். பொற்கோ வாசுதேவன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பலசரக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஆர்.எஸ்.ஈஸ்வரப்பன் தலைமையில் செயலர் சாமிநாதன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.  உலக திருக்குறள் ஆன்மிக பேரவை சார்பில் ஆற்காடு தோப்புகானா வடக்கு உயர்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், அறிவு கோயிலில் நிறைவு பெற்றது. பின்னர் திருக்குறள் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அரக்கோணத்தில்... 
 நெமிலியை அடுத்த அசநெல்லிகுப்பத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு அதன் தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார்.திருவள்ளுவர் உருவச்சிலைக்கு நெமிலி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வேதைய்யா மாலை அணிவித்தார். இதில், அசநெல்லிகுப்பம் ஊராட்சி முன்னாள் தலைவர் கார்த்திகேயன், ஆசிரியர்கள் கதிரவன், மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேலூர்பேட்டையில் அரக்கோணம் ஒன்றிய பாஜக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு எஸ்.ராஜகுமார் தலைமை வகித்தார். 
பாஜக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ், திருவள்ளுவர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, திருக்குறள்களை ஒப்பித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குடியாத்தத்தில்...
 குடியாத்தம் திருவள்ளுவர் தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
 நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை என்.மலர்க்கொடி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, சிறப்புரையாற்றினார். பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com