நீர்த் தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை
By DIN | Published On : 22nd January 2019 06:51 AM | Last Updated : 22nd January 2019 06:51 AM | அ+அ அ- |

கே.வி. குப்பத்தை அடுத்த அன்னங்குடியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைக் கட்டுவதற்காக திங்கள்கிழமை பூமிபூஜை போடப்பட்டது.
எம்எல்ஏ ஜி.லோகநாதன் இந்த பூஜையைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எடகிருஷ்ணாபுரம் வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் டி. கோபி, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி, உதயகுமார், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.