ஜிஎஸ்டி சமர்ப்பிப்பது குறித்த விளக்கக் கூட்டம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், மாநில வரி அலுவலகம் இணைந்து ஜிஎஸ்டி ஆர்-9, 9-ஏ வருடாந்திர படிவங்களை சமர்ப்பிப்பது குறித்து விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம் ரோட்டரி சங்கம், மாநில வரி அலுவலகம் இணைந்து ஜிஎஸ்டி ஆர்-9, 9-ஏ வருடாந்திர படிவங்களை சமர்ப்பிப்பது குறித்து விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் ரோட்டரி சங்க கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் பி.எல்.என்.பாபு தலைமை வகித்தார். செயலர் டி.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார். 
மாநில வரி அதிகாரிகள் சாய்முருகன் (குடியாத்தம் மேற்கு), செந்தில் (கிழக்கு) ஆகியோர் வருடாந்திர படிவம் சமர்ப்பிப்பது, ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி படிவம் தாக்கல் செய்வது, ஜிஎஸ்டி படிவம் தாக்கல் செய்த அனைத்து வணிகர்களும் ஆகஸ்ட் மாதத்துக்குள் படிவம் தாக்கல் செய்வதன் அவசியம் குறித்து விளக்கினர்.
மேலும், ஜிஎஸ்டி பதிவு செய்து, பிறகு ரத்து செய்த வணிகர்களும் ஜிஎஸ்டி ஆர்-9, படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஹரி, தணிக்கையாளர் எம்.கிருபானந்தம், வணிக வரித் துறை அலுவலர்கள், வணிகர்கள், தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com