3,732 வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பட்டியல் ஒட்டும் பணி தொடக்கம்

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி 3,732 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பட்டியல் ஒட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி 3,732 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பட்டியல் ஒட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அதிகபட்சம் 16 வேட்பாளர்கள் பெயர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்பதால் இத்தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதையடுத்து தேர்தலுக்குப் பயன்படுத்த உள்ள 3,732 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,866 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டு 1,998 இயந்திரங்கள் (விவி பேட்) ஆகியவை வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 பேரவைத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஏற்கெனவே அந்தந்த வட்டாட்சியர் அலவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்தொடர்ச்சியாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்களை ஒட்டும் பணி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இப்பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் அடுத்த ஓரிரு நாள்களில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆம்பூரில்...
ஆம்பூர் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்பணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com