கைதிகளை நல்வழிப்படுத்தும் இடமாக சிறைச் சாலைகள் இருப்பது அவசியம்: கர்நாடக சிறைத் துறை ஏடிஜிபி மேகாரிக்

சிறைச் சாலைகள் கைதிகளை நல்வழிப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும். அதற்கு சிறைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடக சிறைத் துறை ஏடிஜிபி என்.எஸ்.


சிறைச் சாலைகள் கைதிகளை நல்வழிப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும். அதற்கு சிறைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடக சிறைத் துறை ஏடிஜிபி என்.எஸ். மேகாரிக் தெரிவித்தார். 
வேலூர் அருகே தொரப்பாடியில் உள்ள சிறை நிர்வாகம், சீர்திருத்த பயிற்சி மையத்தில் (ஆப்கா) 32 சிறை காவலர்கள், கர்நாடகத்தில் இருந்து இரு துணைக் கண்காணிப்பாளர்கள், குஜராத்திலிருந்து ஓர் உதவிக் காவலர் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர். இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா பெண்கள் சிறை அருகே உள்ள சிறை மைதானத்தில் நடைபெற்றது. 
இதில், கர்நாடக சிறைத் துறை ஏடிஜிபி என்.எஸ். மேகாரிக் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பயிற்சி அதிகாரிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், அவர் பயிற்சியின் போது சிறப்பாகப் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கிப் பேசியது:
சீருடைப் பணி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. "ஆப்கா' மூலம் சிறை நிர்வாகம் குறித்தும், கைதிகளை நல்வழிப்படுத்துவது தொடர்பாக பயிற்சி பெற்றுள்ளவர்கள் அதைப் பணிபுரியும் சிறைகளில் செயல்படுத்த வேண்டும். கைதிகளின் மனநிலையை அறிந்து செயலாற்ற வேண்டும். உடல் ஆரோக்கியம், மனநலம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும். விசாரணைக் கைதி, தண்டனைக் கைதி என பாகுபாடு காட்டக் கூடாது. சிறைச் சாலைகள் கைதிகளை நல்வழிப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும். அவர்களின் மருத்துவ சேவைகளையும் உறுதிசெய்ய வேண்டும். சிறையில் எப்போதும் அமைதி நிலவ பாடுபட வேண்டும். சீருடை அதிகாரியாக எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அந்த வாய்ப்பு கிடைத்துள்ளவர்கள் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
வேலூர் ஆப்கா இயக்குநர் சந்திரசேகர் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் கருப்பணன், வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி ஜெயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறைத் துறை அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com