நிலக்கரி ஏற்றி வந்த ரயில் பெட்டியில் தீ

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிலக்கரி ஏற்றி வந்த ரயில் பெட்டியில் வெள்ளிக்கிழமை தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிலக்கரி ஏற்றி வந்த ரயில் பெட்டியில் வெள்ளிக்கிழமை தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு 57 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை சரக்கு ரயில் புறப்பட்டது. மாலை 5.40 மணியளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது, ரயிலின் கார்டு பெட்டியில் இருந்து 3-ஆவது பெட்டியில் தீப்பிடித்து புகை கிளம்பியது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில் நிலைய அலுவலர் ராமமூர்த்தி, திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் திராவிடமணி தலைமையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதையடுத்து சரக்கு ரயில் மேட்டூர் அனல் மின் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டது.
இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகள் கூறியது:
தற்போது வெயிலின் தாக்கத்தால் நிலக்கரியில் அழுத்தம் ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com