ஜோலார்பேட்டையில் குடிநீர் வாரியத்தினர் ஆய்வு

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணி குறித்து குடிநீர் வாரியம் மற்றும் சென்னை மெட்ரோ குடிநீர்


ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணி குறித்து குடிநீர் வாரியம் மற்றும் சென்னை மெட்ரோ குடிநீர் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 65 கோடியை  தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இப்பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி ஜோலார்பேட்டை, சென்னை ரயில்வே அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மைப் பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் சென்னை மெட்ரோ குடிநீர் குழுவினர் ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: ரயில் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் மூலம் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் என 4 தவணையில் குடிநீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஓரிரு நாள்களில் உயரதிகாரிகள் குழு ஆலோசனை செய்தபின், குடிநீர் விநியோகம் செய்வது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மக்களுக்கு குடிநீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com