நுகர்பொருள் வாணிபக் கிடங்கு திறப்பு விழா
By DIN | Published On : 25th June 2019 07:38 AM | Last Updated : 25th June 2019 07:38 AM | அ+அ அ- |

ஆம்பூர் அருகே புதிதாக கட்டப்பட்ட நுகர்பொருள் வாணிபக் கிடங்கின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் அருகே கீழ்முருங்கை கிராமத்தில் ரூ.4.10 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கை காணொலி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
அதேவேளையில் ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் குத்து விளக்கேற்றினார். அதிமுக நகர செயலாளர் எம்.மதியழகன், மாதனூர் ஒன்றியச் செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, திமுக நகரச் செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், பாஜக வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் கொ.வெங்கடேசன், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் நாகராஜ், தரக் கட்டுப்பாட்டு மேலாளர் ஜவஹர் நூரானி, கிடங்கின் பொறுப்பாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.