பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
By DIN | Published On : 25th June 2019 07:40 AM | Last Updated : 25th June 2019 07:40 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் பொதுத் தேர்வில் பள்ளியளவில் சிறப்பிடம் பெற்ற அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரிஸ் பிரிசிசன் லிமிடெட் தொழிற்சாலை சார்பில் 2018-2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியளவில் முதல் இரு இடங்களைப் பெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கு சிறந்த மாணவர் என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி தொழிற்சாலை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மிட்சுபிஷி நிறுவன மனிதவளத் துறை துணைத் தலைவர் வி.எஸ்.ஜனார்த்தனன் வரவேற்றார்.நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.ஸ்ரீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். நிறுவனத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான மசுசோ டெரடா பள்ளி மாணவர்களுக்கு விரும், ரொக்கப் பரிசு, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். விற்பனை இயக்குநர் கே.எம். திலீப்குமார் நன்றி கூறினார்.