குரூப்-4 போட்டித் தேர்வு: முன்னாள் படை வீரர்களுக்கு  5% இடஒதுக்கீடு

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, வேலூர் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் க.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 6,491 பேர் காலிப் பணியிடங்களுக்கு குரூப்-4 போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
இந்த போட்டித் தேர்வில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதிபடைத்த முன்னாள் படை வீரர்கள் ஜூலை 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் செப்டம்பர் 1-ஆம் தேதி. மேலும் விவரங்கள் அறிய டிஎன்பிஎஸ்சி இணையதளத்தையும், வேலூர் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416-2977432 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com