அரக்கோணம்: 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 01st May 2019 06:39 AM | Last Updated : 01st May 2019 06:39 AM | அ+அ அ- |

அரக்கோணம் நகரில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம் நகரில் உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதன்பேரில் நகராட்சி துப்புரவுப் பிரிவு அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் காந்தி ரோடு, பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பல கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைகளில் இருந்து 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.