சூறாவளிக் காற்றுடன் பரவலாக மழை

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை சூறாவளிக் காற்று வீசியதால் தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்தது.

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை சூறாவளிக் காற்று வீசியதால் தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்தது.
ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை சூறாவளிக் காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால், கன்னிகாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இரு உயர்மின் கோபுரங்களுக்கு இடையே செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்வாரியப் பணியாளர்கள் அங்கு சென்று அறுந்து விழுந்த மின்கம்பியை அப்புறப்படுத்தி சரி செய்தனர். 
சூறாவளிக் காற்று காரணமாக ஆம்பூர் ஆயிஷாபீ நகரிலுள்ள மசூதியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அதே பகுதியில் 5 வீடுகளின் சிமெண்ட் கூரைகள் சேதமடைந்தன. ஆம்பூரில் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வாணியம்பாடியில் மழை...
வாணியம்பாடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. 
வள்ளிப்பட்டு, விஜிலாபுரம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், மின்மாற்றி உள்பட 4 மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. 
வள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகன், 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். சூறைக் காற்று காரணமாக கொட்டகை இடிந்து விழுந்ததில் 8 ஆடுகள் பலியாயின. தகவலறிந்த மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், முன்னாள்  எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com