மக்களவையில் இழந்ததை உள்ளாட்சியில் பிடிப்போம்: முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி

மக்களைவைத் தேர்தலில் இழந்ததை உள்ளாட்சித் தேர்தலில் பிடிப்போம் என முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தெரிவித்தார்.

மக்களைவைத் தேர்தலில் இழந்ததை உள்ளாட்சித் தேர்தலில் பிடிப்போம் என முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தெரிவித்தார்.
சோளிங்கரில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியது:
மக்களவைத் தேர்தலில் நமது செயல்பாடுகள் எப்படி இருந்தன? அவற்றை நாம் எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும்? என நம்மை நாமே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 
நாம் தோல்வியடையவில்லை. மக்கள், திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பிவிட்டார்கள். அவை பொய் என்று இனிமேல் அவர்கள் தெரிந்து கொள்வார்கள். நாம் சோர்ந்து விடக்கூடாது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மேலும் துடிப்புடன் செயல்பட வேண்டும். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரஉள்ளது. இத்தேர்தலில் எதிரணி ஓரிடத்தில் கூட வராத நிலையை நாம் உருவாக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் இழந்ததை உள்ளாட்சித் தேர்தலில் பிடிப்போம் என்றார் ஏ.கே.மூர்த்தி.
இக்கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி பேசுகையில் "திமுகவினர் உள்ளாட்சி தோறும் கூட்டம் போட்டு பொய்யான வாக்குறுதிகளை அளித்து கிராமத்துப் பெண்களை ஏமாற்றி விட்டனர். இப்போது அவை பொய் என்பதை பெண்கள் தெரிந்து கொள்வார்கள்.
உண்மையான வாக்குறுதிகளை அளித்தவர்கள் யார் என்று அவர்கள் தற்போது உணர்ந்து கொள்வார்கள். இதை உள்ளாட்சித் தேர்தலில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
இக்கூட்டத்தில் சோளிங்கர் எம்எல்ஏ கே.சம்பத், பாமக முன்னாள் எம்எல்ஏ இளவழகன், மாநில துணைப் பொதுச் செயலர் சரவணன், மாவட்டச் செயலர் அ.ம.கிருஷ்ணன், பாமக மாவட்ட நிர்வாகி சக்கரவர்த்தி, தலைமை நிலையப் பேச்சாளர் தம்பி ஏழுமலை, தமாகா மாவட்டத் தலைவர் அரிதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com