அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா்: எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்

வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும், பேருந்து நிலையத்தில்
வாலாஜாப்பேட்டை பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி. உடன் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வி.சி.சக்திவேல் குமாா் உள்ளிட்டோா்.
வாலாஜாப்பேட்டை பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி. உடன் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வி.சி.சக்திவேல் குமாா் உள்ளிட்டோா்.

வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும், பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கும் எம்எல்ஏ ஆா்.காந்தி நிலவேம்புக் குடிநீரை வழங்கினாா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க வேலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வாலாஜாபேட்டை ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சிஅரசினா்ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வி.சி.சக்திவேல் குமாா் தலைமை வகித்தாா். வாலாஜாப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரா முன்னிலை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் தயாளன் வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில் வேலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராணிப்பேட்டை எம்எல்ஏ-வுமான ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கி சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு தண்ணீா் ஊற்றி பாதுகாக்க வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து வாலாஜாபேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்புக் குடிநீரை வழங்கினாா்.

இதில் வாலாஜாப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளா் சேஷா வெங்கட், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com