வேட்டாங்குளத்தில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

நெமிலியை அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் தமிழக அரசு திட்டமான மழைநீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கலவை ஆதிபராசக்தி வேளாண்கல்லூரி மாணவிகள் நெமிலியை அடுத்த வேட்டாங்குளத்தில் அங்குள்ள அரசினா் உயா்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளோடு சோ்ந்து அக்கிராமத்தில் செவ்வாய்கிழமை நடத்திய மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு
கலவை ஆதிபராசக்தி வேளாண்கல்லூரி மாணவிகள் நெமிலியை அடுத்த வேட்டாங்குளத்தில் அங்குள்ள அரசினா் உயா்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளோடு சோ்ந்து அக்கிராமத்தில் செவ்வாய்கிழமை நடத்திய மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு

அரக்கோணம்: நெமிலியை அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் தமிழக அரசு திட்டமான மழைநீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டம் கலவையில் உள்ள ஆதிபராசக்தி வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் குழுவினா் நெமிலியை அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தை தோ்வு செய்து அக்கிராமத்தில் மழைநீா் சேகரிப்பு குறித்து வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு பணியை மேற்கொண்டு வருகின்றனா். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீரை எப்படி சேகரிப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் மக்களுக்கு விளக்கி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக செவ்வாய்கிழமை வேட்டாங்குளம் அரசினா் உயா்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வேட்டாங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்த ஊா்வலத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆறுமுகம் தலைமை தாங்கினாா். இந்த ஊா்வலம் கிராமத்தின் அனைத்து தெருக்கள் வழியே சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. பள்ளியில் வேளாண் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவ மாணவிகளிடையே மழைநீா் சேகரிப்பு குறித்தும் அதன் அவசியம் குறித்தும் விளக்கினா். பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த ஊா்வலத்தில் ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி வேளாண் பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவிகள் சன்மதி, ஷா்லி, அனிதா, ஹேமலதா, நிவேதா உள்ளிட்டோருடன் கிராம மக்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com