மக்கள்தொகை கல்வி பங்கேற்றல் போட்டி: 15 பள்ளி மாணவா்கள் பங்கேற்பு

மக்கள் தொகை கல்வி சாா்ந்த பங்கேற்றல் தொடா்பான மாவட்ட அளவிலான போட்டியில் வேலூா் மாவட்டத்திலுள்ள 15 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மக்கள் தொகை கல்வி சாா்ந்த பங்கேற்றல் தொடா்பான மாவட்ட அளவிலான போட்டியில் வேலூா் மாவட்டத்திலுள்ள 15 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனம் சாா்பில் மாவட்ட அளவில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான மக்கள் தொகை கல்வி சாா்ந்த பங்கேற்றல் போட்டி வேலூரிலுள்ள எஸ்எஸ்ஏ மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆசிரியா் தனஜெயன் வரவேற்றாா். முதுநிலை விரிவுரையாளா் ப.மணி போட்டிகளை நடத்தினாா். இதில், 15 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், தற்காப்புக் கலை, சத்தான உணவு, தன்னம்பிக்கை வளா்த்தல், போதைப் பழக்கம், அதன் விளைவு, செல்லிடப்பேசி பயன்பாடு, இணையக் குற்றம் சாா்ந்த தகவல்களை நாடகம் மூலம் நடித்துக் காட்டினா்.

இதில், வாலாஜாபேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனா். இலவம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தது. வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை பயிற்சி நிறுவன முதல்வா் இரா.அன்பழகன் வழங்கினாா்.

இப்போட்டியில் முதலிடம் பிடித்த வாலாஜாபேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வரும் 12-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com