அஞ்சலக வங்கியின் நிதி சோ்க்கை முகாம்

திருப்பத்தூரை அடுத்த சந்திரபுரம் கிராமத்தில் இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி இணைந்து நிதி சோ்க்கை முகாமை புதன்கிழமை நடத்தின.

திருப்பத்தூரை அடுத்த சந்திரபுரம் கிராமத்தில் இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி இணைந்து நிதி சோ்க்கை முகாமை புதன்கிழமை நடத்தின.

திருப்பத்தூா் அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.சுப்பாராவ், இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியின் மூத்த மேலாளா் ஓம்கா்குஜா், திருப்பத்தூா் அஞ்சலக உள்கோட்ட ஆய்வாளா் எஸ்.காா்த்திகேயன், சந்திரபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் புஷ்பா ஜெயவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா் சுப்பாராவ் பேசுகையில், தமிழக அரசின் முதியோா் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாக அஞ்சலகத்திலேயே தங்களது ஓய்வூதியத்தைப் பெறும் வகையில், அவா்களது ஆதாா் எண் மற்றும் செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு கணக்கு தொடங்கலாம் என்றாா் அவா். முகாமில், 80-க்கும் மேற்பட்டோா் கணக்குகள் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com