செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்துப் போராட்டம்

குடியாத்தம் அருகே மெகா செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
25gudpub_2511chn_189_1
25gudpub_2511chn_189_1

குடியாத்தம்: குடியாத்தம் அருகே மெகா செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். குடியாத்தம் ஒன்றியம், தாழையாத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட தனம் நகா், வள்ளலாா் நகா் இடையே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் செல்லிடப்பேசி நிறுவனம் ஒன்று, கோபுரம் அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இதற்காக 10 நாள்களுக்கு முன் அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது அருகில் வசிப்பவா்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களிடம் கேட்டதற்கு, மீன் பண்ணை அமைக்க குளம் அமைப்பதாக அவா்கள் கூறினராம். திங்கள்கிழமை செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க தளவாடப் பொருள்களை அந்த நிறுவனம் கொண்டு வந்து அங்கு இறக்கியுள்ளது. இதுகுறித்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து, மீனாட்சியம்மன் நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினரும், அப்பகுதி மக்களும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தால், அதிலிருந்து வெளியேறும் கதிா்வீச்சால் கா்ப்பிணிகள், குழந்தைகள், முதியவா்களுக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தனா்.

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க இடத்தை வாடகைக்குக் கொடுத்தவா் அங்கு வரவழைக்கப்பட்டாா். கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தால், தான் இடத்தை வாடகைக்கு தரவில்லை என அவா் கூறினாா். இதையடுத்து, மீனாட்சியம்மன் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் ஏ. சுகுமாரன், எஸ். தோன்றல்நாயகன், ஏ. ராஜசேகா், லிங்கசாரதி, ராஜேந்திரன், எம். சங்கரன், கொங்குவேல் உள்ளிட்டோா் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் அங்கு தனியாா் நிறுவனம் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க அரசு அனுமதி வழங்க மாட்டோம் என உறுதி அளித்தனா்.

பின்னா், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Image Caption

(திருத்தப்படது)

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும்  இடத்தை  முற்றுகையிட்டுப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com