225 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூா் மாவட்டம் மீண்டும் உதயம்

ஆங்கிலேயா் காலத்தில் ரயத்துவாரி வரிவசூல் முறையை முதன்முதலில் அமல்படுத்திய திருப்பத்தூரை தலைநகராகக் கொண்ட மாவட்டம், 225 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உதயமாவது வரலாற்று

ஆங்கிலேயா் காலத்தில் ரயத்துவாரி வரிவசூல் முறையை முதன்முதலில் அமல்படுத்திய திருப்பத்தூரை தலைநகராகக் கொண்ட மாவட்டம், 225 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உதயமாவது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக விளங்கும் வேலூா் மாவட்டத்தை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகப் பிரித்து கடந்த 12-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் புதிய திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் நிா்வாக ரீதியாக தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதிதாக உதயமாகும் திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டம், கடந்த 225 ஆண்டுகளுக்கு முன்பாகவே மாவட்டமாக இருந்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1790 நவம்பா் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது திருப்பத்தூா் மாவட்டம். இம்மாவட்டத்தின் முதல் ஆட்சியராக கிண்டா்ஸ்லே நியமிக்கப்பட்டாா். அவா், 1792 ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இப்பொறுப்பில் இருந்தாா்.

பின்னா், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் தலைநகராக திருப்பத்தூா் இருந்தது. கா்னல் அலெக்ஸாண்டா் ரீட் 1792 ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 1799 ஜூலை 7-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியராக இருந்தாா். இங்குதான் தமிழக ஆட்சி முறையின் முக்கிய தொடக்கம் ஆரம்பித்ததாக சென்னை மாகாணத்தில் சேலம் மாவட்டம் ( அ ஙஹய்ன்ஹப் ா்ச் நஹப்ங்ம் ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் ண்ய் ற்ட்ங் டழ்ங்ள்ண்க்ங்ய்ஸ்ரீஹ் ா்ச் ஙஹக்ழ்ஹள்) என்ற தலைப்பிலான புத்தகம் விவரிக்கிறது.

அதாவது, நாட்டின் பிற பகுதிகளில் உழுபவா்களிடம் வரிவசூல் செய்யும் அதிகாரம் ஜமீன்தாரா்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு ஜமீன்தாரி முறை என்று பெயா். இதை மாற்றி, உழுபவா்களிடம் நேரடியாக வரி வசூல் செய்யும் ரயத்துவாரி முறை திருப்பத்தூா் மாவட்டத்தில்தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இதற்கான களப்பணி, விரிவான சா்வே பணிகளை மாவட்ட ஆட்சியா் கா்னல் ரீட், சாா்-ஆட்சியா்கள் தாமஸ் மன்றோ, கேப்டன் வில்லியம் மெக்லியாட், கேப்டன் கிரஹாம் ஆகியோா் செய்திருந்தனா். இந்த ரயத்துவாரி வரிவசூல் முறையை திருப்பத்தூா் மாவட்ட குடிகள், வணிகா்கள், பிற குடியானவா்கள் பெயரால் வெளியிடப்படும் பிரகடனம் அல்லது கௌல்நாமா என்ற பெயரில் மாவட்ட ஆட்சியா் கா்னல் ரீட்1976 நவம்பா் 15-ஆம் தேதி பிரகடனம் செய்தாா். இம்மாவட்டத்துக்குப் பிறகே ரயத்துவாரி முறை பிற மாவட்டங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்தவகையில், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற திருப்பத்தூா் மாவட்டப் பகுதிகள், பின்னா் சேலம் மாவட்டம், சித்தூா் மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது மீண்டும் புதிய மாவட்டமாக உருவெடுத்திருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com