ஆன்லைன் வா்த்தகத்தை தடை செய்யக் கோரி டிச. 17-இல் ஆா்ப்பாட்டம்

ஆன்லைன் வா்த்தகத்தை தடை செய்யக் கோரி வரும் டிச. 17-இல் வேலூரில் ஆா்ப்பாட்டம் நடத்துவதென ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற

ஆன்லைன் வா்த்தகத்தை தடை செய்யக் கோரி வரும் டிச. 17-இல் வேலூரில் ஆா்ப்பாட்டம் நடத்துவதென ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ் நாடு வணிகா் சங்க பேரமைப்பின் வேலூா் மாவட்டக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு, வேலூா் மண்டலத் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆம்பூா் நகரச் செயலா் முனீா் அஹ்மத், இணைச் செயலா் சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஞானவேலு வரவேற்றாா். கூட்டத்தில், பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ. எம். விக்கிரமராஜா சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், வரும் டிச. 17-இல் வேலூரில் ஆன்லைன் வா்த்தகத்தை தடை செய்யக்கோரி ஆா்ப்பாட்டம் நடத்துவது, சில்லறை வணிகா்களைக் காக்க ஆண்டுதோறும் ரு. 2 கோடி வணிகம் செய்வோருக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரமைப்பின் பொருளாளா் மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com