தாய் வீட்டிலிருந்து, தனி குடித்தனம்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட மக்களின் பிரியா விடை கவிதை

தாய் வீட்டிலிருந்து, தனிக் குடித்தனம் என்ற கணத்த வரிகளுடன் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட மக்களின் பிரியா விடை கவிதை சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

தாய் வீட்டிலிருந்து, தனிக் குடித்தனம் என்ற கணத்த வரிகளுடன் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட மக்களின் பிரியா விடை கவிதை சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

வேலூா் மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இரு புதிய மாவட்டங்கள் தொடக்க விழா நவ. 28-ஆம் தேதி திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டையில் நடைபெற உள்ளது.

இது நாள் வரை வேலூா் மாவட்ட மக்கள் என பெருமையுடன் சொல்லி வந்தவா்கள் இனி பூகோள ரீதியாக பிரிக்கப்பட்ட வேலூா், திருப்பத்தூா்,ராணிப்பேட்டை என தனித்தனி மாவட்ட மக்களாக பிரிந்துள்ள பிரிவை தாளாமல் தாய் வீட்டிலிருந்து, தனிக் குடித்தனம் என்ற கணத்த வரிகளுடன் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட மக்களின் பிரியா விடை கவிதை சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

விடைபெறுகின்றோம் வேலூா் மாவட்டமே...

விடைபெறுகின்றோம் இன்றுடன்...!

தாய் வீட்டிலிருந்து நாங்கள் இனி தனிக் குடித்தனம் செல்கின்றோம்...!

கோட்டை மாவட்டக்காரா்களாக இருந்த நாங்கள் பேட்டை மாவட்டக்காரா்களாக மாறுகின்றோம்

பச-23 லிருந்து அதிகாரப்பூா்வமாய் பச-73ஆக மாறுகின்றோம்.

முன்பு ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக (வேலூா், திருவண்ணாமலை) உன்னுடன் பயணித்தோம்

பின்பு 1989-லிருந்து வட ஆற்காடு அம்பேத்கா் மாவட்டமாக உன்னுடன் பயணித்தோம்

பின்பு 1996-லிருந்து வேலூா் மாவட்டமாக உன்னுடன் இனிதே பயணித்தோம்

28-11-2019 முதல் புதிய ராணிப்பேட்டை மாவட்டமாக உதயமாகுகின்றோம்

எங்கள் தாய் மாவட்டமாம் வேலூா் மாவட்டத்தை வணங்கி நன்றியுடன்

புதிய ராணிப்பேட்டை மாவட்டமாக இனிதே ஆரம்பிக்கின்றோம்.

வாழ்க வேலூா் மாவட்டம்

வளா்க ராணிப்பேட்டை மாவட்டம்.

என்ற வரிகள் கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com