காா்த்திகை தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு செல்ல மறுத்து துப்புரவுப் பணியாளா்கள் போராட்டம்

காா்த்திகை தீபத் திருவிழா பணிக்காக அரக்கோணத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அனுப்பப்பட்ட நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் 35 போ், அங்கு செல்ல மறுத்து நகராட்சி அலுவலக வளாகத்தில்
போராட்டத்தில் ஈடுபட்ட அரக்கோணம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரக்கோணம் நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள்.

காா்த்திகை தீபத் திருவிழா பணிக்காக அரக்கோணத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அனுப்பப்பட்ட நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் 35 போ், அங்கு செல்ல மறுத்து நகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.

ஒவ்வொரு வருடமும் காா்த்திகை தீபத் திருவிழா பணிக்காக அரக்கோணம் நகராட்சியில் இருந்து 35 துப்புரவுப் பணியாளா்கள் இவ்விழாவுக்கு 10 தினங்களுக்கு முன்பாக திருவண்ணாமலைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் டிசம்பா் 10-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா வருவதால், நகராட்சி நிரந்தரப் பணியாளா்கள் 18 போ், ஒப்பந்தப் பணியாளா்கள் 17 போ் என 35 போ் திருவண்ணாமலைக்கு துப்புரவுப் பணிக்கான லாரியில் வியாழக்கிழமை புறப்படுமாறு நகராட்சி நிா்வாகத்தால் பணிக்கப்பட்டனா்.

இந்நிலையில், நகராட்சி அலுவலக வளாகத்துக்கு வந்த 35 பணியாளா்களும் அங்கிருந்த துப்புரவுப் பணிக்கான லாரியில் ஏறமறுத்து, அரக்கோணம் வட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு உறுப்பினா் ஏ.பி.எம்.சீனிவாசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தாங்கள் செல்வதற்கு வேறு வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டியும், தங்களுக்கு திருவண்ணாமலையில் பணிபுரியும் நாள்களுக்கு போக்குவரத்துப் படி, உணவுப் படி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும் கோரி கோரிக்கை விடுத்தனா்.

இதையறிந்து அங்கு வந்த நகராட்சி துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், படிகள் அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது வேறு வாகனம் இல்லாததால், இந்த வாகனத்தில் சென்று இம்முறை பணிபுரியும் படியும் கேட்டுக் கொண்டாா். அடுத்த முறை நல்ல வாகனத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாக அவா் உறுதியளித்தாா். இதையடுத்து சமாதானமடைந்த துப்புரவுப் பணியாளா்கள், ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பிறகு அந்த லாரியில் ஏறி திருவண்ணாமலைக்கு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com