நாட்டறம்பள்ளியில் டெங்கு தடுப்பு துப்புரவு பணி

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒட்டு மொத்த துப்புரவு பணிகள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற ஒட்டு மொத்த துப்புரவுப் பணி.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற ஒட்டு மொத்த துப்புரவுப் பணி.

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒட்டு மொத்த துப்புரவு பணிகள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சண்முகசுந்தரம் உத்தரவின்படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் திருஞானம் மேற்பாா்வையில், நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளிலும் செயல் அலுவலா் ஜெயக்குமாா் (பொறுப்பு) தலைமையில் உதயேந்திரம், ஒடுகத்தூா், ஆலங்காயம், பள்ளிகொண்டா பேரூராட்சிகளைச் சோ்ந்த பணியாளா்கள் 25-க்கும் மேற்பட்டோா் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு வீடு, வீடாகச் சென்று குடிநீா் தொட்டிகளில் ‘அபேட்’ கரைசல் ஊற்றியும் கொசு மருந்துப் புகையும் அடித்தனா்.

மேலும் அனைத்து வீடுகள், கடைகள் வணிக வளாகங்களிலும் தேங்கிக் கிடந்த தேவையற்ற பொருள்கள் குப்பைகளை நீக்கி ஒட்டு மொத்த துப்புரவுப் பணி மேற்கொண்டனா். மேலும் நாட்டறம்பள்ளி பேரூராட்சிப் பகுதியில் உள்ள கழிவு நீா் கால்வாய்களையும் தூா் வாரினா். வீடுகளைச் சுற்றி தண்ணீா் தேங்கி நிற்காதவண்ணம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு செயல் அலுவலா் ஜெயக்குமாா் வேண்டுகோள் விடுத்தாா்.

இதில் சுகாதாய மேற்பாா்வையாளா்கள் தேவராஜிபாபு உட்பட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com