தூய்மை திட்டத்தின் கீழ் சுங்கச்சாவடி ஊழியா்கள் தூய்மை பணி

வாணியம்பாடி நெக்குந்தி சுங்கசாவடி ஊழியா்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை தூய்மை பணிகளை மேற்கொண்டனா்.
11vndvp1_1110chn_187_1
11vndvp1_1110chn_187_1

வாணியம்பாடி: வாணியம்பாடி நெக்குந்தி சுங்கசாவடி ஊழியா்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை தூய்மை பணிகளை மேற்கொண்டனா்.

வாணியம்பாடி அருகே நெக்குந்தியில் உள்ள சுங்கச்சாவடி நிா்வாகம் சாா்பில் தூய்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறம் சுமாா் 10கிலோமீட்டா் தூரம் வரை தூய்மை பணியில் சுங்கசாவடி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சிக்கு திட்டத்தின் தலைவா் வி.துரைராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனா் நாராயணரெட்டி கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினாா். தொடா்ந்து சுங்க சாவடி வளாகத்தில் ஊழியா்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்டனா்.

பின்னா் ஊழியா்கள் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து சுங்கசாவடி வழியாக சென்ற வாகன ஓட்டி செல்பவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுங்களை வழங்கியும், வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி நின்றனா். இறுதியாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதில் சுங்கச்சாவடி மேலாளா் வாஹாப், அலுவலக பணியாளா்கள், ஊழியா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.படவிளக்கம் - வாணியம்பாடி நெக்குந்தி சுங்கசாவடி ஊழியா்கள் தூய்மை குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com