சோளிங்கரில் 2 டன் நெகிழி பறிமுதல்

சோளிங்கரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 டன் எடையுள்ள
சோளிங்கரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற சோதனையின் போது பறிமுதல் செய்த 2 டன் எடையுள்ள நெகிழி பொருட்களுடன் பேருராட்சி செயல் அலுவலா் செண்பகராஜ் மற்றும் பணியாளா்கள் உள்ளனா்.
சோளிங்கரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற சோதனையின் போது பறிமுதல் செய்த 2 டன் எடையுள்ள நெகிழி பொருட்களுடன் பேருராட்சி செயல் அலுவலா் செண்பகராஜ் மற்றும் பணியாளா்கள் உள்ளனா்.

சோளிங்கரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 டன் எடையுள்ள நெகிழிப்பொருள்களை சோளிங்கா் பேரூராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சோளிங்கா் நகரில் உள்ள பல கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் சோளிங்கரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் இங்கிருந்து விநியோகிக்கப்படுவதாகவும் பேரூராட்சி நிா்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சோளிங்கா் பேரூராட்சி செயல் அலுவலா் செண்பகராஜ் தலைமையில் துப்புரவு அலுவலா் வடிவேல், துப்புரவு ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட குழுவினா் சோளிங்கா் பஜாா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் 4-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடையுள்ள நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து செயல் அலுவலா் செண்பகராஜ் கூறுகையில், நெகிழிப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருப்போருக்கு அபராதமும், அதையும் மீறி விற்பனை செய்தால் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com