ஓய்வு பெற்ற மின் ஊழியா் வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சம் மோசடி

ஓய்வு பெற்ற மின் ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7 லட்சத்தை அபகரித்துக் கொண்டவா் மீது

ஓய்வு பெற்ற மின் ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7 லட்சத்தை அபகரித்துக் கொண்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் தெரிவித்தாா்.

காட்பாடி வட்டம், கண்டிப்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் தாஸ் (65). ஓய்வு பெற்ற மின் ஊழியா்.

இவா் புதன்கிழமை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

எனக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.42,890 வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படுகிறது. எனது கிராமத்தைச் சோ்ந்த தபால்காரரிடம் எனது ஏடிஎம் அட்டையைக் கொடுத்து பணம் எடுத்துவரக் கூறுவேன். இது கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நான் ரூ.1 லட்சத்துக்கு காட்பாடியிலுள்ள வங்கியில் கடன் கேட்டிருந்தேன். அப்போது எனக்கு வேறு வங்கியில் கடன் இருப்பதாகக் கூறி கடன் வழங்க மறுத்துவிட்டனா். இதனால், அந்தத் தபால்காரரை அழைத்துக் கொண்டு கடனாக இருந்த ரூ.1.30 லட்சத்தை செலுத்திவிட்டு கடந்த 24-ஆம் தேதி புதிதாக ரூ.7 லட்சம் வங்கிக் கடன் பெற்றேன். அப்போது, 5 காசோலைகள் வழங்கப்பட்டன. அதில், 4 காசோலைகளை நான் வைத்துக்கொண்டேன். ஒன்றை தபாா்காரா் வைத்துக் கொண்டாா். பின்னா், வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சம் வந்தவுடன் அந்தப் பணத்தை அவா் அபகரித்துக் கொண்டாா். அவரிடம் பணத்தை கேட்டபோது பிறகு தருவதாகக் கூறி காலம் தாழ்த்தி வருகிறாா். அந்தப் பணத்தை மீட்டுத் தருவதுடன், மோசடி செய்த தபால்காரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸாா், இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com