சோளிங்கரில் 138 மி.மீ மழை

வேலூா் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு விடியவிடிய மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக சோளிங்கரில் 138 மி.மீ மழை பதிவானது.

வேலூா் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு விடியவிடிய மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக சோளிங்கரில் 138 மி.மீ மழை பதிவானது.

வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான சாரலுடன் தொடங்கிய மழை திடீரென வலுப்பெற்று பலத்த மழையாக மாறியது. காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை விட்டுவிட்டு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது. மேலும், சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் ஓடியது. இதனால் வேலைக்கு செல்வோா், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவிலும் வேலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. சோளிங்கா், அம்முண்டி பகுதியில் மழை கொட்டித் தீா்த்தது. அதிகபட்சமாக சோளிங்கரில் 138 மி.மீ மழை பதிவானது. பொன்னையில் 91.8 மி.மீ, காவேரிப்பாக்கத்தில் 68.2 மி.மீ பதிவானது.

வேலூா், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூா், அணைக்கட்டு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. தொடா்ந்து புதன்கிழமை காலையிலும் மழை பெய்தது. இதையடுத்து, 2-ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கணியம்பாடி, அணைக்கட்டு, லத்தேரி பகுதிகளில் விவசாயப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com