10 புதிய பேருந்துகளின் சேவை: அமைச்சர் கே.சி.வீரமணி தொடக்கி வைத்தார் 

வேலூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 10 புதிய பேருந்துகளின் சேவையை தமிழக வணிகவரி,

வேலூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 10 புதிய பேருந்துகளின் சேவையை தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். 
தமிழக மக்களின் பயன்பாட்டிற்காக 370 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் கடந்த வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். 
இதில், வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 இல் 2 பேருந்துகளும் அடங்கும். இந்நிலையில், மீதமுள்ள 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்ட துணைப் பொது மேலாளர் வணிகம் பொன்பாண்டி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் 370 புதிய பேருந்துகள் சென்னையில் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப் பட்டன. இதில், 12 பேருந்துகள் வேலூர் மண்டலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 நகர பேருந்துகள் அன்றே தொடக்கி வைக்கப்பட்டன. 
மீதமுள்ள 10 புதிய பேருந்துகள் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. 
இவற்றில் வேலூரிலிருந்து தாம்பரம் வரை 4 பேருந்துகளும், வேலூரிலிருந்து கல்பாக்கம் வரை 4 பேருந்துகளும், பேர்ணாம்பட்டிலிருந்து சென்னைக்கு 2 பேருந்துகள் என மொத்தம் 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார் அவர்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். வேலூர் எம்எல்ஏ பா.கார்த்திகேயன், ஆவின் தலைவர் த.வேலழகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் துணைப் பொது மேலாளர் (வணிகம்) பொன்பாண்டி, துணை மேலாளர் (தொழில்நுட்பம்) நடேசன், (பணிகள்) ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com