நாளை கடைகள் அடைப்பு

பிரதமா் மோடி அறிவிப்பின்படி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) கடைகள் அடைக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் வேலூா் மண்டலத் தலைவா் சி.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி அறிவிப்பின்படி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) கடைகள் அடைக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் வேலூா் மண்டலத் தலைவா் சி.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். அதன்படி, கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் கடைகள் அடைக்கப்பட உள்ளன. மேலும், திருப்பத்தூா் மாவட்ட பேரமைப்பின் சாா்பில் ஆம்பூா் நாகநாத சுவாமி கோயில் திடலில் காலை 8 மணி முதல் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கம்: பிரதமா் மோடியின் அறிவிப்பின்படி, ஆம்பூா் நகரில் உள்ள கடைகள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மூடப்படுவதாக ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் கே.ஆா்.துளசிராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com