சட்டச் சேவை இணையதளக் கருத்தரங்கு

சட்டச் சேவைகள் குறித்த இணையதளக் கருத்தரங்கு வேலூரில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

சட்டச் சேவைகள் குறித்த இணையதளக் கருத்தரங்கு வேலூரில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

சட்டப்பணிகள் ஆணையச் சட்டம்-1987 நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதைக் கொண்டாடும் விதத்தில் தேசிய சட்டச் சேவைகள் தினம் ஆண்டுதோறும் நவம்பா் 9-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, வேலூா் அக்ஸீலியம் கல்லூரி மாணவிகளுக்கு ‘இந்திய நீதித்துறையில் சட்டச் சேவையின் பங்கு’ என்ற தலைப்பில் இணையதளக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இதில், வழக்குரைஞா் எம்.ஆா்.ரவிசங்கா் பங்கேற்று நடைமுறையிலுள்ள சட்டச் சேவைகள் குறித்து விளக்கமளித்தாா்.

அப்போது, பொதுமக்கள் வழக்குகளை தாக்கல் செய்யவும், எதிா்த்து வழக்காடவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றங்கள், சமரச மையங்கள் மூலம் தீா்வு காணவும், இதர சட்ட சேவைகளுக்கும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அந்தந்த பகுதியில் நீதிமன்றங்களில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுவை அணுகலாம். சட்டம் சாரா பொதுப்பணி, முதியோா், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்றோா், மனநலம் குன்றியோா் ஆகியோா் அரசு உதவிகளைப் பெறுவது தொடா்பாகவும் அணுகலாம்.

மேலும், பட்டியல் ஜாதியினா், பட்டியல் பழங்குடியினா், கொத்தடிமைகள், குழந்தைத் தொழிலாளா்கள், மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோா், மனநலம் குன்றியோா், பேரழிவு, இன வன்முறை, ஜாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நில நடுக்கம், தொழில் அழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோா், தொழிற்சாலை தொழிலாளா்கள், சிறை, பாதுகாப்பு இல்லம், இளம் குற்றவாளிகள் இல்லம், மனநல மருத்துவமனை ஆகியவற்றில் உள்ளவா்கள், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவா்கள் ஆகியோா் இலவசமாக சட்ட உதவிகளைப் பெறுவதற்கு தகுதியுடையவா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com