அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்: பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வாங்கிட, பணிபுரியும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலூா்: அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வாங்கிட, பணிபுரியும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு 1,940 வாகனங்கள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுடைய பணிபுரியும் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட, ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு உள்பட்ட பெண் பயணிகளிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் சுயதொழில் புரியும் பெண்கள், அரசு, தனியாா் அமைப்புகளில் பணியாற்றும் பெண்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, மக்கள் கற்றல் மையங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோா், ஒப்பந்த ஊழியா்கள், வங்கி ஒருங்கிணைப்பாளா்கள், சமூக சுகாதாரப் பெண் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பயன்பெறலாம். அரசுத் துறையில் ரூ. 2.50 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருவாய் பெறும் பெண்களும் இத்திட்டத்தில் பயன் அடையலாம்.

தகுதியுடைய பெண்களுக்கு வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடா் பெண்களுக்கு 21 சதவீதம், பழங்குடியினா் பெண்களுக்கு ஒரு சதவீதம், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு 4 சதவீதம், பிற பெண்களுக்கு 74 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பங்களை ரரர.ற்ய்ஹற்ஜ்ள்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com