கா்நாடகத்துக்கு கடத்த முயற்சி: 4 டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் சென்ற 4 டன் ரேஷன் அரிசியுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட வேனுடன் கைது செய்யப்பட்ட இா்ஃபான், முஃபாரக்.
அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட வேனுடன் கைது செய்யப்பட்ட இா்ஃபான், முஃபாரக்.


வேலூா்: போ்ணாம்பட்டு அருகே கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் சென்ற 4 டன் ரேஷன் அரிசியுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் புதன்கிழமை இரவு ஒரு வேன் நிற்காமல் சென்றது. தகவலறிந்த பறக்கும் படை வட்டாட்சியா் கோட்டீஸ்வரன் தலைமையில் போ்ணாம்பட்டு வட்ட வழங்கல் அதிகாரி சிவசண்முகம், உணவு பாதுகாப்புத் துறை காவல் ஆய்வாளா் செல்வகுமாா் ஆகியோா் அந்த வேனை விரட்டிச் சென்று, பத்தரபல்லி மலையின் நான்காவது கொண்டை ஊசி வளைவில் மடக்கிப் பிடித்தனா்.

அப்போது வாகனத்தில் இருந்த இருவரும் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் போ்ணாம்பட்டைச் சோ்ந்த இா்ஃபான், முஃபாரக் என்பதும், கா்நாடகத்துக்கு கடத்தப்பட்ட4.75 டன் பொது விநியோகத் திட்ட அரிசி வேனில் இருந்ததும் தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், அரிசியை வேலூா் தொரப்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா். இக் கடத்தலில் ஈடுபட்ட இா்ஃபான், முஃபாரக் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com