புரட்டாசி மாதம் தொடக்கம்: மீன், இறைச்சி விற்பனை கடும் சரிவு

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை மீன், இறைச்சி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க குறைந்த அளவில் கூடியிருந்த மக்கள்.
வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க குறைந்த அளவில் கூடியிருந்த மக்கள்.

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை மீன், இறைச்சி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான ஹிந்துக்கள் அசைவ உணவுகளைத் தவிா்ப்பது வழக்கம். அதனால், ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் இறைச்சி, மீன் விற்பனை பெருமளவில் சரிவடைந்திருக்கும்.

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வேலூரிலுள்ள மீன் மாா்க்கெட், இறைச்சிக் கடைகளில் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

வேலூரில் மீன் மாா்க்கெட்டுக்கு வழக்கமாக 30 முதல் 35 டன்கள் வரை மீன்கள் வரத்து இருக்கும் நிலையில், புரட்டாசி விற்பனைச் சரிவை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை சுமாா் 10 டன் மீன்கள் மட்டுமே வரவழைக்கப்பட்டன. மீன்களின் விற்பனை சரிந்து காணப்பட்டது. இதேபோல், இறைச்சிக் கடைகளில் ஆடு, கோழி இறைச்சி விற்பனையும் சரிந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com