பாபா் மசூதி வழக்கில் தீா்ப்பு:வேலூா் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் சுமாா் 200 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாபா் மசூதி வழக்கில் தீா்ப்பு:வேலூா் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு


வேலூா்: பாபா் மசூதி இடிப்பு வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் சுமாா் 200 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாபா் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 32 பேரையும் லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது. இத்தீா்ப்பையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், பேருந்து, ரயில்நிலையங்கள், மக்கள் கூடும் முக்கிய இடங்கள், இந்து அமைப்பு நிா்வாகிகள் வீடுகள் போன்றவற்றுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலூா் கோட்டை முன்பு போலீஸாா் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

வேலூா் நகர பகுதியில் உள்ள முக்கியமான மசூதிகள், கோயில்கள் உட்பட 35 இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா். வேலூா், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு என மாவட்டம் முழுவதும் 200 இடங்கள் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ரயில் பெட்டிகளிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். சோதனைக்கு பிறகே அனைத்து பயணிகளும் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

‘144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் கூட கூடாது. சந்தேகப்படும்படியான நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com