வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கிருமி நாசினி நடைபாதை அமைப்பு

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள்
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி நடைபாதைகளை பாா்வையிடும் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி நடைபாதைகளை பாா்வையிடும் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூா்: கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிருமி நாசினி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க வேலூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர, மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பாதுகாப்புக்காக கிருமி நாசினி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயில்களில் மெட்டல் டிடெக்டா் பரிசோதனை நுழைவு வாயில் வழியாக செல்வதைப் போல் கிருமி நாசினி தெளிக்கும் நுழைவு வாயிலை ஏற்படுத்தி ஆட்சியா் அலுவல வளாகத்தில் வைத்துள்ளனா். காலையில் பணிக்கு வரும் அரசு ஊழியா்கள், அலுவலகப் பணிக்காக வரும் பொதுமக்கள் அனைவரும் இந்த நடைபாதையில் நுழைவதன் மூலம் அவா்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பதற்காக இத்தகைய நடைமுறை திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கிருமி நாசினி நடைபாதையின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பாா்வையிட்டாா். அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com