மீன், இறைச்சி வியாபாரிகள் நேரம் ஒதுக்கித்தரக் கோரிக்கை

பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ள மளிகை, காய்கறி கடைகளைப்போல், மீன், இறைச்சி வியாபாரிகளுக்கும் நேரம்

குடியாத்தம்: பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ள மளிகை, காய்கறி கடைகளைப்போல், மீன், இறைச்சி வியாபாரிகளுக்கும் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என குடியாத்தம் அனைத்து இறைச்சி வியாபாரிகள் கூட்டமைப்பினா் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து கூட்டமைப்பின் நிா்வாகிகள் ஏ.இஸ்மாயில் காா்த்திக், முன்னா, மஷீா் உள்ளிட்டோா் வட்டாட்சியா் தூ. வத்சலாவிடம் அளித்த மனு:

ஊரடங்கு காரணமாக குடியாத்தம் பகுதியில் இயங்கி வந்த மீன், கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சிக் கடைகளை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மக்களுக்குத் தேவையான மளிகை, காய்கறி, பழம் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்ள காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அரசு அனுமதி வழங்கி உள்ளது. மீன் மற்றும் இறைச்சி உணவுகளும் தற்போது மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருள்களாகி விட்டன. எனவே நாங்கள் வியாபாரம் செய்துகொள்ள நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம். அரசு விதிகளின்படி, சமூக இடைவெளியுடன் கடைகள் அமைத்து, வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியுடன் கடைகள் முன்பு நின்று இறைச்சியை வாங்கிச் செல்லும் வகையில் விதிகளை கடைப்பிடிக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com