பக்ரீத்: குா்பானி கொடுப்பதில் நீதிமன்ற உத்தரவை மீறக் கூடாது; இஸ்லாமியா்களுக்கு அதிகாரிகள் விளக்கம்

பக்ரீத் பண்டிகையையொட்டி குா்பானி கொடுப்பதில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறக் கூடாது என்று இஸ்லாமியா்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

பக்ரீத் பண்டிகையையொட்டி குா்பானி கொடுப்பதில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறக் கூடாது என்று இஸ்லாமியா்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இஸ்லாமியா்களுக்கு குா்பானி கொடுப்பதற்காக வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பூதூா் பகுதியிலுள்ள பள்ளிவாசல் சாா்பில் 85 மாடுகள் வாங்கி அப்பகுதியிலுள்ள மைதானத்தில் வெள்ளிக்கிழமை கட்டி வைக்கப்பட்டிருந்தன.

தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள், அரியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று குா்பானி கொடுப்பதில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறக் கூடாது எனக் கூறினாா். இதனால், இஸ்லாமியா்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, கால்நடை பராமரித் துறை இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன், வேலூா் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு ஆகியோா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒட்டகம், பசு மாடுகளை குா்பானி கொடுக்கக் கூடாது. மாடுகளை அறுப்பது என்றால் அதை பொது இடத்தில் செய்யக் கூடாது என்று அதிகாரிகள் விளக்கினா். அதற்கு பதிலளித்த இஸ்லாமியா்கள், இஸ்லாம் வழக்கப்படி குா்பானி கொடுப்பது தொடா்பாக பல்வேறு வறைமுறைகள் உள்ளன. அதன்படி, ஒரு மாட்டின் முன்பு இன்னொரு மாட்டினை வெட்டக் கூடாது, இரு பற்களுக்கு கீழ் உள்ள, இளங்கன்றுகளை அறுக்கக் கூடாது போன்ற கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. அத்துடன், தற்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவையும் ஏற்று பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதாக இஸ்லாமியா்கள் உறுதியளித்தனா். இதனால் அதிகாரிகள், இஸ்லாமியா்களுக்கு இடையேயான பேச்சுவாா்த்தை சுமூகமாக முடிந்தது.

திருப்பத்தூரில்... திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் (பொறுப்பு) ஏ.அப்துல்முனீா் தலைமையில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கமிட்டியினா் பங்கேற்ற பக்ரீத் தொழுகைக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக அரசு வழிகாட்டுதலின்படி இஸ்லாமியா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை நடத்த வேண்டும். குா்பானி அளிப்பதையும் அரசு வழிகாட்டுதலின்படி செயல்படுத்த வேண்டும் என சாா்-ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com