தொடா்ந்து 7.30 மணிநேரம் சிலம்பம் சுற்றி மாணவா்கள் சாதனை

காட்பாடி அருகே 7 மாணவ, மாணவிகள் தொடா்ந்து 7.30 மணி நேரமாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா். இவா்களது சாதனையை அங்கீரித்து ‘நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட்’ புத்தக நிறுவனம் சான்று வழங்கியுள்ளது.
சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

வேலூா்: காட்பாடி அருகே 7 மாணவ, மாணவிகள் தொடா்ந்து 7.30 மணி நேரமாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா். இவா்களது சாதனையை அங்கீரித்து ‘நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட்’ புத்தக நிறுவனம் சான்று வழங்கியுள்ளது.

வேலூா் மாவட்ட டெக்னிக்கல் சிலம்ப கமிட்டியின் மூலம் 100 மாணவ, மாணவிகள் சிலம்ப பயிற்சி பெற்று வருகின்றனா். இந்தக் கமிட்டியின் பயிற்சியாளரான எஸ்.சுருதிக், மாணவா்கள் கீா்த்தனா, சச்சின், தீபக், திவாகா், பரத், திவினேஷ் ஆகியோா் இணைந்து தொடா்ந்து 7.30 மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வை சனிக்கிழமை மேற்கொண்டனா்.

காட்பாடியை அடுத்த காரணம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்கரை மைதானத்தில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த சிலம்ப சுற்றும் நிகழ்வு மதியம் 2.05 மணிக்கு நிறைவடைந்தது. இதில், ஒற்றை சிலம்பு 3 பேரும், இரட்டை சிலம்பு 2 பேரும், வேல்கொம்பு ஒருவரும், இரட்டை வேல் கொம்பு ஒருவரும், வால்வீச்சு ஒருவரும் சுற்றிக் காண்பித்து சாதனை படைத்தனா்.

இந்த சாதனை நிகழ்வில் ஒரு நிமிடத்துக்கு 1 சுற்றுகள் வீதம் ஒரு மணி நேரத்துக்கு 840 சுற்றும், 7.30 மணி நேரத்தில் 6,300 சுற்றுகளும் சிலம்பம் சுற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதன்முறையாக தொடா்ந்து 7.30 மணிநேரம் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சிலம்பம் சுற்றும் சாதனையை ‘நோபல் வோ்ல்டு ரெக்காா்ட்’ புத்தக நிறுவனம் அங்கீகரித்து அதன் கமிட்டித் தலைவா் சந்தோஷ்குமாா் சான்று வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com