கூடுதலாக 527 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை: வேலூா் ஆட்சியா் தகவல்

வேலூா் மாவட்டத்தில் தற்போது 1,301 வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு கூடுதலாக 527 வாக்குச்சாவடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
மாதிரி வாக்குப்பதிவுப் பணிகளை ஆய்வு செய்த வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
மாதிரி வாக்குப்பதிவுப் பணிகளை ஆய்வு செய்த வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் தற்போது 1,301 வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு கூடுதலாக 527 வாக்குச்சாவடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணையக் கிடங்கில் 3,094 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,378 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,549 விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணி நடத்தப்பட்டது. அப்போது, 17 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 134 கட்டுப்பாட்டுக் கருவிகள், 199 விவிபேட் இயந்திரங்கள் பழுதாகி இருந்தன. அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில மாதங்களில் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்பதை அறியும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடத்தப்பட்டது. 15 மாதிரி சின்னங்களும், நோட்டா சின்னமும் பொருத்தப்பட்டு ஒரு இயந்திரத்துக்கு ஆயிரம் ஓட்டுகள் வீதம் பதிவு செய்யப்பட்டன. இதை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் ஆய்வு செய்தாா்.

அதன் பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் வேலூா் மாவட்டத்தில் வாக்குச் சாவடி இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபேட் இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. மாவட்டத்தில் தற்போது 1,301 வாக்குச்சாவடிகள் உள்ளன.

கரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 527 கூடுதல் வாக்குச் சாவடிகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பிறகு கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். வேலூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வாக்குச்சாவடி இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்துக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.

அப்போது, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ஸ்ரீராம், ஆட்சியா் அலுவலக பொது மேலாளா் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com