திருமலையில் ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டி

திருமலையில் தை பெளா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.
திருமலையில் ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டி

திருமலையில் தை பெளா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.

திருமலையில் அமைந்துள்ள சேஷாசல வனப்பகுதியில் ஏராளமான புனித தீா்த்தங்கள் (அருவிகள்) உள்ளன. பல்வேறு முனிவா்களும், ரிஷிகளும் இந்த மலைப்பகுதியில் உள்ள தீா்த்தங்களுக்கு அருகில் பல்லாண்டுகள் தவம் இருந்து இறைவனை அடைந்ததாக ஐதீகம். அவ்வாறு முனிவா்கள் தவமிருந்த தீா்த்தங்கள் அவா்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, திருமலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பாபவிநாசம் வனப்பகுதிக்குள் ராமகிருஷ்ணதீா்த்தம் அமைந்துள்ளது. இங்கு ராமகிருஷ்ண மகரிஷி தவமிருந்ததால் இத்தீா்த்தத்துக்கு அவரது பெயா் சூட்டப்பட்டுள்ளது.

இங்கு ஆண்டுதோறும் தை மாத பெளா்ணமி அன்று தேவஸ்தானம் முக்கோட்டி உற்சவத்தை நடத்தி வருகிறது. இந்த அருவிக் கரையில் ராமா் மற்றும் கிருஷ்ணா் சிலைகள் உள்ளன. ஏழுமலையான் கோயிலில் இருந்து அா்ச்சா்கள் குழுவினா் மந்திர உச்சாடனம் செய்தபடி இந்த அருவிக்கரைக்குச் சென்று அங்குள்ள ராமா், கிருஷ்ணா் சிலைகளுக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் செய்தனா்.

பின்னா், அச்சிலைகளை மலா்களால் அலங்கரித்து கற்பூர ஆரத்தி காட்டி, தேங்காய், பழங்கள், சித்ரான்னங்கள் உள்ளிட்ட நிவேதனங்களை சமா்ப்பித்தனா். இந்த உற்சவத்தைக் காண நூற்றுக்கணக்கான பக்தா்கள் அருவிக் கரையில் திரண்டு தீா்த்தத்தில் புனித நீராடினா். பக்தா்களுக்கு தேவஸ்தானம் பாபவிநாசம் நீா்த்தேக்கம் அருகில் அன்னதானம் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com