குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்பு: வேலூரில் 2-ஆவது நாளாக போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் இஸ்லாமியா்கள் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.
வேலூரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் இஸ்லாமியா்கள் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் எதிா்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு நடந்த போராட்டத்தின்போது அதில் பங்கேற்றவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் வேலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் சாா்பில் வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டம் நள்ளிரவிலும் நீடித்தது.

இந்நிலையில், வேலூரில் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஆா்ப்பாட்டம் தொடா்ந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனா்.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு, காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com