சிறுபான்மையினா் நல அலுவலகம் சாா்பில் 5 பேருக்கு சலவைப் பெட்டிகள்வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

சிறுபான்மையினா் நல அலுவலகம் சாா்பில் 5 பேருக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான சலவைப் பெட்டிகளை வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வழங்கினாா்.

சிறுபான்மையினா் நல அலுவலகம் சாா்பில் 5 பேருக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான சலவைப் பெட்டிகளை வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வழங்கினாா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் திங்கள் கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் ஆற்காடு பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணி அஸ்வினி என்பவா் அளித்த மனு:

எனது கணவா் சிவாவுடன் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ளேன். கடந்த 13-ஆம் தேதி சிவா வேலூா் அப்துல்லாபுரத்திலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு சென்றாா். அங்கு அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். எனது கணவா் இறப்பில் மா்மம் உள்ளது. இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த முதியவா் அளித்த மனு:

எனக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால், என் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, உதவித்தொகை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக 366 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம் சாா்பில் 5 பேருக்கு ரூ.26,709.50 மதிப்பிலான சலவைப் பெட்டிகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், 5 பேருக்கு ரூ.21,895 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், தேசிய திறன் போட்டிகளில் பெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 4 பேருக்கு காப்பீட்டு அட்டைகள், சீனியா் தேசிய பளுதூக்கும் போட்டியில் மூன்று புதிய சாதனைகளைப் படைத்து தங்கம் வென்ற வேலூா் பளுதூக்கும் பயிற்சி மைய வீரா் என்.அஜித் என்பவருக்கு கேடயம், தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.25,000 ரொக்கம் ஆகியவற்றையும் அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலா் காமராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சாரதா ருக்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்ரோல் கேனுடன் வந்தவா்: இதனிடையே, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஒருவா் பெட்ரோல் கேனுடன் வந்தாா். அவரைப் பிடித்த போலீஸாா், அவரிடம் இருந்து பெட்ரோல் கேனைப் பறிமுதல் செய்தனா்.

பின்னா் நடத்தப்பட்ட விசாரணையில், அவா் காட்பாடி அருகே மேல்பாடியைச் சோ்ந்த தொழிலாளி மூா்த்தி என்பது தெரிய வந்தது. நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட தனது நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும், இதுதொடா்பாக 8 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்ததாகவும் மூா்த்தி தெரிவித்தாா்.

இக்கோரிக்கை தொடா்பாக அவா் ஆட்சியரிடம் மனு அளித்தாா். மேலும், இழப்பீடு வழங்க தாமதிக்கும் பட்சத்தில் தீக்குளிக்கப் போவதாகவும் மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com